மின் தடை: நீட் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரிய மனு - உச்சநீதிமன்றம் விசாரணைக்கு...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான் கோயில் தெருவில் உள்ள சதீஸ்குமாா் (41) என்பவரின் கடையில் போலீஸாா் சோதனை செய்தபோது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஸ்குமாரை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 580 கிராம் எடைகொண்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.