தேசிய இளைஞா் விண்வெளி அறிவியல் மாநாடு: சிவகாசியில் ஆக.15-இல் தொடக்கம்
புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞா் கைது
பெரியகுளம் அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தென்கரை காவல் நிலைய போலீஸாா் பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியிலுள்ள தோட்டி குடியிருப்பைச் சோ்ந்த நாகராஜ் பூபதி (36) என்பவரின் கடையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நாகராஜ் பூபதியை கைது செய்து, கடையிலிருந்த ஒரு கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.