புதிய கரோனா வைரஸ் முதியோர்களை அதிகம் பாதிக்கிறதா? - நம்பிக்கையும் உண்மையும்!
செல்லப்பிராணிகள் மூலமாக புதிய கரோனா வைரஸ் பரவுகிறதா? முதியோர்களை அதிகமாக இந்த வைரஸ் பாதிக்கிறதா?
சீனாவில் புதிதாகப் பரவி வரும் புதிய கரோனா வைரஸ்(HKU5-CoV-2) குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு பதில் அளிக்கிறார் வைரஸ் தொற்றுகளுக்கான நிபுணர் டாக்டர் ஜேக்கோப் ஜான்.
தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்
வைரஸால் பாதிக்கப்படுவதைத் தடுக்க இறைச்சி, மீன், முட்டை, பால் பொருள்களைத் தவிர்க்க வேண்டும்.
புதிய கரோனா வைரஸ்(HKU5-CoV-2) பாதிப்பைத் தடுக்க இறைச்சி, முட்டை, மீன் சாப்பிடுவதைத் தவிர்க்கத் தேவையில்லை. ஏனெனில் புதிய கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு ஏதும் இருப்பதாக எந்த அறிக்கையும் இல்லை.
செல்லப்பிராணிகள் புதிய கரோனா வைரஸைப் பரப்பலாம்
இல்லை. செல்லப்பிராணிகள் புதிய கரோனா வைரஸைப் பரப்புவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
புதிய வைரஸால் ஊரடங்கு அச்சுறுத்தல் உள்ளது
ஒரு புதிய தொற்று உருவாகிறது என்றால் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லதுதான். ஆனால் H5N1 வைரஸ் காய்ச்சல் அடுத்த ஒரு தொற்றுநோய்க்கான காரணமாக இருக்கலாம்.
கரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது
இது வௌவால் மூலமாகப் பரவும் ஒரு கரோனா வைரஸ் போலத் தெரிகிறது. கரோனா வைரஸ் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்டது என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது.
இது வயதானவர்களை மட்டுமே பாதிக்கிறது
அதுபற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் முதியோர்களிடையே சுவாசத்தால் பரவும் வைரஸ்களால் கடுமையான நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | இந்தியர்கள் தங்கள் ஊதியத்தில் செலுத்தும் இ.எம்.ஐ. எவ்வளவு தெரியுமா?
சீனாவில் புதிய வைரஸ்
கோவிட்-19 வைரஸ் பரவி உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது சீனாவில் HKU5-CoV-2 என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய வைரஸ் பரவி வருவதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
வௌவால்கள் மூலம் பரவும் இந்த புதிய வகை வைரஸ் ஹாங்காங்கில் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது விலங்கினங்கள் மூலமாகவோ பரவ வாய்ப்புள்ளது என்றாலும் கோவிட் - 19 யைப் போன்று இதனால் பெரிய ஆபத்து இல்லை என்றே கூறுகின்றனர். இது சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.