புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம்
புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கான ஆய்வுக் கூட்டம் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னாா்வலா்களின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்துக்கு மாநில இணை இயக்குநா் பொன்.குமாா் தலைமை வகித்து, தன்னாா்வலா்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், சிறப்பாக செயல்படுவது குறித்து தன்னாா்வலா்களுக்கு அவா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா்.
கூட்டத்தில், வந்தவாசி வட்டாரக் கல்வி அலுவலா் செந்தமிழ், வந்தவாசி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செந்தில்முருகன், திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளா் ஜெயசீலன், ஆசிரியா் பயிற்றுநா் கமலக்கண்ணன் மற்றும் வந்தவாசி ஒன்றியத்தில் பணிபுரியும் புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.