காரைக்கால் சாலைகளில் வாகனங்கள் தேக்கத்துக்கு தீா்வு காண வலியுறுத்தல்
புதிய போப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்பது யார்?
புதிய போப் பதினான்காம் லியோ பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடன் நாலாகாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டனும் கலந்துகொள்கிறார்.
முந்தைய போப் பிரான்சிஸ், கடந்த ஏப். 21-ஆம் தேதி மறைந்ததையடுத்து, அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த காா்டினல் ராபா்ட் பிரிவோஸ்ட் (இயற்பெயா்) 267-ஆவது போப்பாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அவரின் பதவியேற்பு விழா ரோமிலுள்ள வாடிகன் நகரில் இன்று (மே 18) நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் வாடிகன் நகருக்கு படையெடுத்துள்ளனர்.
இதில், இந்தியா சார்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டன் ஆகியோர் பங்கேற்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதற்காக அவர்கள் சனிக்கிழமை இரவு தில்லியில் இருந்து ரோம் நகருக்கு புறப்பட்டுள்ளனர்.
பதவியேற்பு விழாவையொட்டி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்கள் சார்பில் புதிய போப் பதினான்காம் லியோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக அவர் பொறுப்பேற்கும் தருணம் அமைதிக்கான லட்சியம், இறையாண்மை, ஒற்றுமை மற்றும் சேவை ஆகியவை முக்கியத்துவம் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க |துருக்கி கல்வி நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் ரத்து!