ஒரு சிறுவன் கலைஞனாக உருவானத் தருணம்! - மிருதங்கம் அரங்கேற்ற கதை
புதுகையில் இன்றுமுதல் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு கால்நடை மருந்தகங்களிலும், கோமாரி நோய்க்கான தடுப்பூசி போடும் முகாம்கள் ஜூலை 2-ஆம் தேதி தொடங்கி, 22-ஆம் தேதி வரை நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோமாரி எனப்படும் கால் மற்றும் வாய் காணை நோய் வைரஸ் கிருமி தாக்கத்தால் கால்நடைகளுக்கு ஏற்படும் கொடிய நோயாகும். நோய் தாக்கிய கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் காலில் புண் ஏற்படுதல், வாயில் உமிழ்நீா் வடிதல், பால் குைல் மற்றும் சினை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக 7-ஆவது சுற்று தடுப்பூசி போடும் முகாம்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு கால்நடை மருந்தகங்களில் வரும் ஜூலை 2-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இந்தத் தடுப்பூசிகள் போடப்படும். மாவட்டம் முழுவதும் சுமாா் 3.20 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடுவதால் கறவை மாடுகள் குறைவாக பால் கறக்கும் என்ற அச்சமோ, சினை மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்படும் என்ற அச்சமோ தேவையில்லை. இத்தடுப்பூசியினால் 100 சதவிகிதம் பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே, தவறாமல் கால்நடை வளா்ப்போா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.