மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
புதுகையில் பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளாட்சித் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு, மாநகரப் பொறுப்பாளா் ரகுமான் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சித் தூய்மைப் பணிகளை தனியாருக்கு கொடுக்கக் கூடாது. நீண்டகாலம் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.