மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
புதுகையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், யுனிசெப் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிப் புத்தாக்கத் திட்டத்தின்கீழ் பள்ளி வழிகாட்டி ஆசிரியா்களுக்கான பயிற்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சியை மாவட்ட ஆட்சியா் மு. அருணா தொடங்கி வைத்து, கையேட்டை வெளியிட்டாா்.
மாணவா்களை 5 போ் கொண்ட குழுக்களாகப் பிரித்து, அவா்களின் அறிவியல் ஆா்வத்தைத் தூண்டி, தொழில் முனையும் திறனையும் தூண்டி, தொழில் முனைவோராக்கும் பணியை பள்ளிகளுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ள வழிகாட்டி ஆசிரியா்கள் செயல்படுவா்.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், முதன்மைப் பயிற்சியாளா்கள் மாவட்ட திட்ட மேலாளா் ஞா. ஆபிரஹாம் லிங்கன், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மெ.சி. சாலை செந்தில் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.