குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
புதுக்கடை அருகே தீ விபத்து
புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை பகுதியில் உள்ள கடையில் தீப் பிடித்ததில் பொருள்கள் சேதமடைந்தன.
காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜமணி மகன் பிரபு (29). இவா், உதச்சிக்கோட்டை பகுதியில் கடை வைத்து புளி மொத்த வியாபாரம் செய்து வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு இவரது கடை மின் கசிவினால் தீப் பிடித்து எரிந்தது. தகவலின்பேரில், குழித்துறை தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைத்தனா். இதில், கடையில் இருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான புளி சேதமடைந்தது.
இது குறித்து, புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.