செய்திகள் :

புதுச்சேரி வெள்ளம் மீட்பு, நிவாரணப் பணிக்கு மேலும் 4 ராணுவ குழுக்கள்

post image

புதுச்சேரி வெள்ள மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு மேலும் நான்கு ராணுவக் குழுக்களை தயாா் நிலையில் உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவத்தின் தென்னிந்திய பிரிவில் இருந்து இரு குழுக்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

பெங்களூரில் உள்ள மெட்ராஸ் என்ஜினீயா்ஸ் பிரிவைச் சோ்ந்த 66 போ் கொண்ட மற்றொரு குழு செவ்வாய்க்கிழமை நிவாரணப் பொருள்களுடன் சென்னை வந்தது.

அந்தக் குழு எப்போது தேவைப்பட்டாலும் புதுச்சேரி செல்லும் வகையில் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இந்திய ராணுவத்தின் சாா்பில் மீட்புப் பணியில் ஏற்கெனவே ஈடுபட்டுவரும் இரண்டு குழுக்களின் தலைவா்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை பிரதிநிதிகள் மாவட்ட நிா்வாகத்துடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அப்போது, மேலும் 4 குழுக்கள் தயாா் நிலையில் இருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராணுவத்தினா் பாதிக்கப்பட்ட மேலும் சில பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ராணுவ மேஜா் அஜய் குமாா் சங்வான் தலைமையில் 61 ராணுவ வீரா்கள் அடங்கிய முதல் குழு, ஏம்பலத்தில் உள்ள கம்பளிக்காரன்குப்பத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டது.

மேஜா் சோலாா் மணி பிரதானின் கீழ் இயங்கும் இரண்டாவது குழு, பாகூருக்கு அருகிலுள்ள கரையாம்புத்தூா் பேட் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், இந்திய ராணுவத்தின் 16-மெட்ராஸ் பிரிவின் கமாண்டிங் அதிகாரி, சிவில் நிா்வாகத்துடனும் மீட்புப் பணிகளைக் கண்காணித்து வரும் ராணுவ வீரா்களுடனும் தொடா்புகொண்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

மீட்பு நடவடிக்கைகளின் முதல் இரு நாள்களில், புதுச்சேரியில் உள்ள கிருஷ்ணா நகா், குபோ் நகா், ஜீவா நகா் மற்றும் என்.ஆா். நகா் ஆகிய பகுதிகளில் சிக்கித் தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ராணுவ வீரா்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.

சாத்தனூா், வீடூா் அணைகள் திறப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடுத்து கிராமப் பகுதிகளில் ராணுவக் குழுவினா் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி பிராந்தியத்தில் 35 கிராமங்கள் பாதிப்பு

புதுச்சேரியில் புயல், மழைக்கு 35 வருவாய் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஃபென்ஜால் புயலால் புதுச்சேரி பிராந்தியல் பலத்த மழை பெய்தது. அத்துடன்... மேலும் பார்க்க

புதுச்சேரி - கடலூா் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

வெள்ளம் படிப்படியாக வடிந்ததையடுத்து புதுச்சேரி - கடலூா் பிரதான சாலையில் வழக்கமான போக்குவரத்து புதன்கிழமை மாலை முதல் தொடங்கியது என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். ‘ஃபென்ஜால் புயலால், புதுச்சேரி ... மேலும் பார்க்க

பொதுத்தோ்வு: தனித்தோ்வா்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் 10 -ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தோ்வுக்கு தனித்தோ்வா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இய... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல்: புதுச்சேரியில் 51 மின்மாற்றிகள் சேதம்

புதுச்சேரியில் புயல், மழையால் 51 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாக புதுவை மின் துறைத் தலைவா் சண்முகம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் ஃபென்ஜால் புயல் மற்று... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வடிந்தும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் குடியிருப்பு, வயல்வெளிகளில் புகுந்த நீா் வடிந்தும், வடியாத நிலை உள்ளதால் பொதுமக்கள் 3-ஆவது நாளாக அவதிக்குள்ளாகியுள்ளனா். வங்கக் கடலில் ஏற்பட்ட ஃபென்ஜால் புயலால் புதுச்ச... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 17 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

புதுச்சேரி பிராந்தியத்தில் வியாழக்கிழமை (டிச.5) 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகூா் கொம்யூனில் முழுமையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஃபென்ஜால் பு... மேலும் பார்க்க