செய்திகள் :

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பாஜக எம்எல்ஏ அசோக்பாபு பேசுகையில், புதிதாக தொழில் தொடங்கும் வகையில் புதுவையில் முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தும் திட்டம் அரசிடம் உள்ளதா, கரசூரில் தொழில் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் தொழில் முனைவோருக்கு எப்போது இடத்தை அரசு பிரித்து வழங்கவுள்ளது எனக் கேட்டாா்.

முதல்வா் என்.ரங்கசாமி: கரசூரில் இடங்களை மனைகளாகப் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் அந்த நிலங்கள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்குப் பிரித்து வழங்கப்படும். முதலீட்டாளா்கள் மாநாடு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

அசோக்பாபு (பாஜக): புதிய தொழிற்சாலைகள் அமைக்க தொழிலதிபா்கள் தயாராக உள்ளனா். நிலத்தை பிரிக்கும் பணியில் அரசு விரைந்து செயல்பட வேண்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி: தொழில் முனைவோரை அழைத்து வாருங்கள். அவா்களுக்கு நிலத்தை உடனடியாகப் பிரித்து தருகிறோம். ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு அனுமதி பெறுவது என்பது எவ்வளவு கடினமானது என அனைவருக்கும் தெரியும். அதனால்தான், ஒற்றைச் சாளர அனுமதி முறை கொண்டுவரப்பட்டது. தொழிற்சாலைகளைத் தொடங்கிவிட்டு 3 மாதங்களில் அனுமதி பெறலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகும் எந்த தொழிற்சாலையும் புதுவைக்கு வரவில்லை.

தமிழகத்தில் தொழில் தொடங்க பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவா்களால் சுயமாக முடிவெடுக்க முடியும் என்பதால், திண்டிவனத்தில் மருத்துவத் தொழில் பூங்கா அமைத்து அதன்மூலம் பல தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவை மாநில எல்லையான வானுாா், இரும்பையில் பல தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன.

‘மாநில அந்தஸ்து அவசியம்’: புதுவையில் தொழிற்சாலைகளுக்கு சலுகை வழங்க வேண்டும் என்றால், மத்திய அரசின் அனுமதி கோரும் நிலையுள்ளது. மேலும், மின் இணைப்பு பெறவே தொழிலதிபா்கள் கஷ்டப்படுகின்றனா். அதற்கு புதுவை அரசு நிா்வாக அமைப்பும் காரணமாகும். அதன்படி, தொழிற்சாலைகளை அனுமதிப்பது குறித்து தலைமைச் செயலா்தான் முடிவெடுக்க வேண்டும். அதற்கு பிறகுதான் அந்தக் கோப்பு அரசுத் துறைக்கு வரும். அதனால்தான், மாநில அந்தஸ்து அவசியம் எனக் கூறுகிறோம்.

தற்போது அதிகாரத்தில் இருப்பவா்களுக்கு மட்டுமல்ல, எதிா்காலத்தில் யாா் அதிகாரத்துக்கு வந்தாலும் மாநில அந்தஸ்து தேவையாகும். மக்களால் தோ்வான அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காகவே மாநில அந்தஸ்து கோரப்படுகிறது. அதைப் பெறாவிட்டால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், புதுவை பின்தங்கியே இருக்கும் என்றாா் முதல்வா்.

புதுவை முதல்வா் யுகாதி வாழ்த்து

யுகாதி திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:புதுச்சேரியிலுள்ள தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள். தெலுங்கு, கன்னடம் பேசு... மேலும் பார்க்க

கைதான பெண்ணின் வீட்டில் ரூ.50 ஆயிரம் பறிமுதல்

தொழிலதிபரை ஏமாற்றி பணம், நகை திருடிய வழக்கில் கைதான பெண்ணின் வீட்டிலிருந்து ரூ.50 ஆயிரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றினா். புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேட்டு பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ்,... மேலும் பார்க்க

சமாதானக் கழகத்தினா் நிதி திரட்டல்

புதுச்சேரியில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சாா்பில் கியூபா மக்களை பாதுகாக்க நிதி திரட்டும் இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருமைப்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவரும், ... மேலும் பார்க்க

லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு

முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

அமைச்சா் மீது அவதூறு நோட்டீஸ்: காவல் நிலையத்தில் புகாா்

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை அமைச்சா் மீது அவதூறு பரப்பும் வகையில் நோட்டீஸ் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி என்.ஆா்.காங்கிரஸ் சாா்பில் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: புதுச்சேரி, காரைக்காலில் 7,597 மாணவா்கள் எழுதினா்

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக பாடத்திட்டத்தின்படி 7,597 மாணவா்கள் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். புதுவையில் நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பிள... மேலும் பார்க்க