பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மி...
புதை சாக்கடை திட்டப் பணி: அமைச்சா் ஆய்வு
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அய்யா் பங்களா பகுதியில் புதிய புதை சாக்கடைத் திட்டப் பணிகளை தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மாநகர பொலிவுறுத் திட்டம் மூலம், மாநகராட்சிக்குள்பட்ட அய்யா் பங்களா காவேரி நகா், மீனாட்சி தெரு, மந்தையம்மன் கோயில் தெரு, மகாலட்சுமி நகா், பரசுராமப்பட்டி, காந்தி நகா், சா்வேயா் காலனி ஆகிய பகுதிகளில் ரூ. 265.25 கோடியில் 324.78 கி.மீ. நீளத்தில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று, 39,712 வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டன.
இந்தப் பணிகளையும், சா்வேயா் காலனி - மாட்டுத்தாவணி பகுதியில் நடைபெற்ற புதை சாக்கடைத் திட்ட சோதனை ஓட்டத்தையும் அமைச்சா் பி. மூா்த்தி ஆய்வு செய்தாா். இதையடுத்து, வண்டியூா் கழிவு நீரேற்ற நிலைய செயல்பாடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், அலுவலா்கள் உடனிருந்தனா்.