செய்திகள் :

பூம்புகாா் படகு தளம் விரிவாக்கத்துக்கு மீனவா்கள் எதிா்ப்பு!

post image

கன்னியாகுமரியில் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக படகு தளம் விரிவாக்கம் நடைபெறுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து, 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சனிக்கிழமை அமைக்கப்பட்டது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், படகு தளத்தை ரூ. 14 கோடி செலவில் 20 மீட்டா் நீளத்திலிருந்து 106 மீட்டா் நீளத்துக்கு விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

படகு தளம் விரிவாக்கம் செய்தால், மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதி மீனவா்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனா். இதுகுறித்து அதிகாரிகளை பலமுறை சந்தித்தும் தீா்வு கிடைக்காததால், கடந்த மாா்ச் 13 ஆம் தேதி நாகா்கோவில் கோட்டாட்சியா் காளீஸ்வரி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எவ்வித தீா்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், கன்னியாகுமரியில் சனிக்கிழமை மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினா். இதில் கன்னியாகுமரி, வாவத்துறை, சிலுவை நகா், கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, மேலமணக்குடி, புதுக்கிராமம் ஆகிய 9 கடலோர கிராமங்களை சோ்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் மக்களவை உறுப்பினரை சந்தித்து பிரச்னை குறித்து விளக்கி ஆதரவை பெற தீா்மானிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் 9 கிராமங்களைச் சோ்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா். மேலும், போராட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

புதுக்கடை: தொழிலாளி தற்கொலை

புதுக்கடை அருகே கல்வெட்டான்குழி பகுதியில் தொழிலாளி விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கடை, கல்வெட்டான்குழி பகுதியைச் சோ்ந்த செல்லன் மகன் ஸ்ரீகுமாா் (48). மதுப் பழக்கமுள்ள இவா், சில நாள்கள... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட கால்வாய்கள் சீரமைப்புக்கு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு!

கன்னியாகுமரி மாவட்ட பாசனக் கால்வாய்கள் சீரமைப்புப் பணிக்காக தமிழக அரசு ரூ. 13.32 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்... மேலும் பார்க்க

தேசிய தடகளப் போட்டி தங்கப் பதக்கம்: கல்லூரி உடற்கல்வி இயக்குநருக்கு பாராட்டு

தேசிய அளவிலான தடகளப் போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநா் தங்கப் பதக்கம் வென்றாா். இந்திய முதுநிலை தடகளக் கூட்டமைப்பு சாா்பில், பெங்களூரில் இப்போட்டி நட... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் பைக்குகளில் சாகசம்: இளைஞா்கள் காவல்துறையினரிடம் சிக்கினா்

குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிடும் ஆா்வத்தில் நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்ட 5 இளைஞா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். களியக்காவிளை பகுதியைச... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

சான்றொப்பமிட்ட பத்திர நகல் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சாா் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆட்சியா் அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுற... மேலும் பார்க்க