79th Independence Day: "78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் தான் நமது நாட்டிற்கு வழிகா...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: முன்னாள் அமைச்சா் புகாா்
திமுகவின் கடந்த நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக முன்னாள் அமைச்சா் பா. வளா்மதி குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:
திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், விலையில்லா கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
திமுக அரசு இந்தத் திட்டங்களை ரத்து செய்து, பெண்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கிறது. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் 20 ஆயிரம் பெண்கள் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டனா். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 25 சதவீதம் அதிகரித்தன. இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால், பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் திமுக இழந்துவிட்டது. தமிழகம் முழுவதும் அதிமுக ஆதரவு அலை வீசத் தொடங்கிவிட்டது என்றாா் அவா்.