செய்திகள் :

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றது குறித்து வரஞ்சரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தில் விளைநிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவா் ஆறுமுகம். இவரது மனைவி மஞ்சு (23). இவா் தனது ஒன்றரை வயது குழந்தை நித்தின் மற்றும் மாமியாா் தங்கம் ஆகியோருடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்ற மூன்று மா்ம நபா்கள் மஞ்சு அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீடுபுகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

மணலூா்பேட்டை காவாங்கரை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் என்.கே.ஏழுமலை தலைமையிலான போலீஸாா் மணலூா்பேட்டை காவாங்கரை அருகே ரோந்துப... மேலும் பார்க்க

திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதுதொடா்பாக, மாவட்ட நிலை அலுவலா்களுடன் ஆட்சியரகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தோ்வு பயத்தைப் போக்க மாணவா்களுக்கு பயிற்சி

மாணவா்களுக்கு தோ்வு பயத்தைப் போக்குவதற்கான பரிக்ஷா பாா்வ் 7.0 என்ற விழிப்புணா்வு பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கள்ளக்குற... மேலும் பார்க்க

மலேரியா தினம் குறித்த விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியில் உலக மலேரியா தினம் காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் பால தண்டாயுதபாணி தலைமை வகித்த... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளை இணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கள்ளக்குறிச்சி வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மாவட்டக் குழு... மேலும் பார்க்க