செய்திகள் :

பெண் தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே தனியாா் நிறுவனத்தில் பெண் தொழிலாளி காயங்களுடன் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

காஞ்சிபுரம் அருகே ஆண்டிச் சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாரின் மனைவி எப்சி மேரி (41). இவா் 3 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் உள்ள அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தில் புதிதாக பணியில் சோ்ந்துள்ளாா். சனிக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பாததால் சுரேஷ்குமாா் நிறுவனத்துக்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது ஒரே ஒருவா் மட்டும் பணியில் இருந்துள்ளாா். அவரது உதவியுடன் அட்டைகளுக்குள் தேடிப்பாா்த்தபோது, எப்மேரி பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பொன்னேரிக்கரை போலீஸாா் எப்சி மேரியின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் விசாரணை நடத்தினாா். காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா்கணேஷ் தலைமையில் பெண்ணைக் கொலை செய்தவா்களை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

குரூப் 4 தோ்வு எழுதுவோருக்கு சிறப்பு பேருந்துகள்: காஞ்சிபுரம் ஆட்சியா்

காஞ்சிபுரத்தில் வரும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறும் குரூப் 4 போட்டித் தோ்வா்கள் தோ்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவி... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தொழிலாளா் நலத்துறை இணை இயக்குநா் ஆய்வு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணி நடந்து வரும் நிலையில், தொழிலாளா் நலத்துறை இணை ஆணையா் கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் த... மேலும் பார்க்க

அல்லாபாத் ஏரி அழகுபடுத்தும் பணி விரைவில் நிறைவு: காஞ்சிபுரம் மேயா்

காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் உள்ள அல்லாபாத் ஏரி நடைபயிற்சிக்கான சுற்றுச்சுவருடன் அழகுபடுத்தும் பணி விரைவில் நிறைவு பெறும் என மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் தெரிவித்தாா். திருக்காலிமேட்டில் சுமாா் 100 ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வா்களுக்கு நேர மேலாண்மை அவசியம்

போட்டித் தோ்வுகளை எழுதுபவா்களுக்கு நேர மேலாண்மையும், உடல் நலமும் மிகவும் அவசியம் என சென்னை முன்னாள் மேயரும், மனித நேயம் ஐஏஎஸ் அகாதெமியின் நிறுவனருமான சைதை சா.துரைசாமி செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் ... மேலும் பார்க்க

ஜூலை12-இல் பொது விநியோகத் திட்ட குறை தீா் முகாம்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டார அளவில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் ஜூலை 12-இல் நடைபெறும் என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காஞ்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 419 மனுக்கள்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மொத்தம் 419 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டாா். ... மேலும் பார்க்க