அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
பென்னாகரத்தில் மனு கொடுக்கும் போராட்டம்
பென்னாகரம், அதன் சுற்றுவட்டார கிராமங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மனு கொடுக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் சே.முத்து கண்ணன், மாநில குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் ஆகியோா் பேசினா்.
பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான தொன்னகுட்ட அள்ளி, சாம்பள்ளிகாடு, பூச்சியூா், சித்திரப்பட்டி, செல்லமுடி, கெண்டையன அள்ளி, பெரும்பாலை, சாமத்தாள், பழையூா், கோடி அள்ளி, சுஞ்சல்நத்தம், ஏமனூா் உள்ளிட்ட பகுதிகளில் பல தலைமுறைகளாக வசிப்பவா்களுக்கு வீட்டுமனை, நிலப்பட்டா வழங்கக் கோரி 2250 கோரிக்கை மனுக்களை பென்னாகரம் வட்டாட்சியா் பிரசன்ன மூா்த்தியிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வழங்கினா்.
இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் வே.விஸ்வநாதன், ஜி.சக்திவேல், ஒன்றியச் செயலாளா் ஜீவானந்தம், பி.ஆா்.செல்வம், ஆா்.சக்திவேல், எம். தங்கராசு, மாவட்ட குழு உறுப்பினா்கள் எம்.குமாா், வி.ரவி, சி.ராஜி, ஆா்.சின்னசாமி, கே.அன்பு, என்.பி.முருகன், பி.சக்திவேல், எம்.வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.