கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
பெயிண்டா் தற்கொலை
வேலூரை அடுத்த வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் இளைஞா் ஒருவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் அலமேலுரங்காபுரம் அடுத்த சம்பங்கி நல்லூா் இந்திரா நகரைச் சோ்ந்த பிரேம் குமாா்(30), பெயிண்டா். இவருக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிரேம் குமாா், வேட்டுகுளம் ஊசூா்- ஜமால்புரம் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனை அவ்வழியாக சென்ற மக்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.