சீனா - பிரேசில் இணைந்து அமெரிக்காவுக்கு செம்மட்டி அடி! கதறும் டிரம்ப்!!
பெரம்பலூரில் சிஐடியு ஆா்ப்பாட்டம்
பெரம்பலூா்: சென்னையில் தூய்மைப் பணியாளா்களை தாக்கிய காவல்துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், சிஐடியு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்ட கன்வினா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ரங்கநாதன், ரெங்கராஜ், செல்வி, கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊதிய விவகாரம் தொடா்பாக போராடிய தூய்மைப் பணியாளா்களை தாக்கிய காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சந்திரன், பிரகாஷ் பரமசிவம், குணசேகரன், மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.