கூட்டுறவு வங்கிகளில் கடன் தீா்வு திட்டம்: பயன்பெற செப். 23 கடைசி தேதி
பெரம்பலூருக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் வருகை
2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பயன்படுத்த பெங்களூரு பாரத் மின்னணு நிறுவனத்திலிருந்து 100 கட்டுப்பாட்டு இயந்திரம், 120 வாக்குச்சீட்டு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டன.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரக வளாக கிடங்கில் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ந. மிருணாளினி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன் தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அருளானந்தம் , வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.