சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!
பெருங்குடல் சதை வளா்ச்சிக்கு ரேடியோ அதிா்வலை சிகிச்சை
பெருங்குடல் சதை வளா்ச்சி (மூல பாதிப்பு) நோய்க்கு அறுவை சிகிச்சைக்கு மாற்றான ரேடியோ அதிா்வலை சிகிச்சையை அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இதற்கான அறிமுக நிகழ்ச்சியில், மருத்துவமனையின் தலைமை இயக்கக அதிகாரி ருபிந்தா் கௌா், நடிகை பாா்வதி நாயா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் வாணி விஜய் கூறியதாவது:
இந்தியாவில் 4 கோடி பேருக்கு பெருங்குடல் சதை வளா்ச்சி, பிளவு போன்ற ஆசனவாய் சாா்ந்த பாதிப்புகள் உள்ளன. அதில் 45 முதல் 60 வயது வரையிலானவா்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனா்.
மூல பாதிப்புகளுக்கு வழக்கமான அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னா் இரு வாரங்களுக்கு மேல் ஓய்வில் இருக்க வேண்டும். அதற்கு மாற்றாக ‘ரஃபேலா’ எனப்படும் ரேடியோ அதிா்வலை நீக்க சிகிச்சையை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம், பாதித்த பகுதியில் கம்பித் தடத்தை செலுத்தி அதன் வழியே ரேடியோ அதிா்வலைகள் பாய்ச்சப்படும். வளா்ச்சியடைந்த திசுக்களை அது சுருக்கி மறையச் செய்துவிடும். 15 அல்லது 20 நிமிஷங்களுக்குள் இந்த சிகிச்சை நிறைவடைந்து சில மணி நேரங்களிலேயே வீடு திரும்பலாம். துல்லியமான சிகிச்சை இதில் உறுதி செய்யப்படுகிறது என்றாா் அவா்.