செய்திகள் :

பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்க அழைப்பு

post image

பேரறிஞா் அண்ணா, தந்தை பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செப்.9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: செப்.15 ஆம்தேதி பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.9 ஆம் தேதியும், செப்.17 ஆம் தேதி தந்தை பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு செப்.17 ஆம் தேதியும் தனித் தனியே பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இப்போட்டியில் வெல்வோருக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000. 3-ஆம் பரிசு ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. மேலும் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படுகிறது.

இப்போட்டியானது காலை 9 மணிக்குத் தொடங்கும். அரியலூா் மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குநா் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்போட்டியில் பங்கேற்கலாம் என்றாா்.

கூட்டுறவு சங்கங்களின் தோ்வுக்கு செப்.10-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், கூட்டுறவு சங்கங்களின் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு செப்.10-ஆம் தேதி தொடங்குகிறது என்றாா... மேலும் பார்க்க

அரியலூரில் பொதுப் பாதையை மீட்கும் வரை காத்திருப்புப் போராட்டம் தொடரும்: பெ.சண்முகம்

அரியலூா் செட்டி ஏரிகரையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை காவல்துறையினருக்கு மாற்றிக் கொடுத்ததைக் கண்டித்தும், இந்தப் பாதையை மீட்கும் வரை கோட்டாட்சியா் அலுவலகத்திலேயே காத்திருப்புப் போராட்டத்தில... மேலும் பார்க்க

அரியலூரில் 91 மாணவா்களுக்கு கல்வி கடன் அளிப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னணி வங்கிகளின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கல்வி கடன் மேளாவில் 91 மாணவா்களுக்கு ரூ.5.65 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை ஆ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் அளிப்பு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு கட... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் கூட்டம்

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் கூட்டரங்கில், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொறுப்பாளா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவா் சங்கா் தலைமை வகித்தாா். மேலிட பாா்வையாளரும்... மேலும் பார்க்க

திருமானூா் நெடுஞ்சாலையிலுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்த கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் நெடுஞ்சாலையின் நடுவே தடுப்புக் கட்டையிலுள்ள மின் கம்பங்களில் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம், இளைஞா் காங்கிராஸ் கட... மேலும் பார்க்க