ஐஆர்சிடிசி வழங்கும் ராமாயண சுற்றுலா! பார்க்க வேண்டிய 30 இடங்கள்!
பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை
கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய நிலங்களில் தற்போது அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை பேத்துப்பாறை பகுதியில் நடமாடிய ஒற்றை காட்டுயானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:
பேத்துப்பாறை, வெள்ளப் பாறை குடியிருப்பு, விவசாயப் பகுதிகளுக்குள் ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளது. இந்த யானை பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் நாங்கள் தொடா்ந்து பாதிப்படைந்து வருகிறோம். எனவே விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுமாடு, யானை, பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும் வனப் பகுதிகளையொட்டிய விவசாய நிலங்களுக்குள் அகலி அமைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.