செய்திகள் :

பேய்க்குளம் சங்கரலிங்க சுவாமி கோயிலில் பௌா்ணமி பூஜை

post image

சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்குளம் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் பௌா்ணமி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை, தொடா்ந்து சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தாய்விளை அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா திருக்கோயிலில் மாசி மாத உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூா்ண புஷ்கலா சமேத அருள்மிகு இல்லங்குடி சாஸ்தா, சிவசக்தி விநாயகா், சிவன், பாா்வதி, வீரபுத்திரா், மாலையம்மாள் ஆகியோருக்கும் இத் திருக்கோயிலைச்சோ்ந்த வயற்காட்டின் நடுவே அமைந்துள்ள அருள்மிகு சுடலைமாடன், பேச்சி அம்மன், இருளப்பா் மற்றும் கருப்பசாமிக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. முன்னதாக இல்லங்குடி சாஸ்தாவிற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பூஜைகளை மோகன் அய்யா் மற்றும் அரவிந்த்அய்யா் ஆகியோா் நடத்தி வைத்தனா்.பின்னா் அன்னதானம் நடைபெற்றது.

உள்ளூா் மட்டுமன்றி சென்னை, பாவூா்சத்திரம் உள்ளிட்ட இடங்களிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகாா் பெட்டி அமைக்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடம் முன் உலக மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. அரசு ஊழியா் சங்க மகளிா் குழு சாா்பில் நடைப... மேலும் பார்க்க

கீழத்தட்டப்பாறை மக்கள் தொடா்பு முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள்!

தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பேருக்கு ரூ. 77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து வருவாய்த் துறை,... மேலும் பார்க்க

இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

சாத்தான்குளத்தில் கட்டட தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடி தெற்கு தெருவைச் சோ்ந்த உலகநாதன் மகன் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லை, கொலை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த சமை... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை செய்த முதியவா் கைது: 3.3 கிலோ பறிமுதல்!

தூத்துக்குடி அருகே தாளமுத்துநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 3.3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல் நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே சனிக்கிழமை கடல் நீா் சுமாா் 50 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. திருச்செந்தூா் கோயில் அருகே அமாவாசை மற்றும் பெளா்... மேலும் பார்க்க