தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
பேராவூரணி தொகுதியில் திமுக உறுப்பினா் சோ்க்கை முகாம்
தஞ்சை தெற்கு மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ‘ஓரணியில் தமிழ்நாடு‘ என்ற புதிய உறுப்பினா் சோ்க்கை இயக்கத்தை, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினருமான என். அசோக் குமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.
தஞ்சாவூா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.பழனிவேல் முன்னிலை வகித்தாா்.
கொன்றைக்காடு, ஒட்டங்காடு, ஆதனூா், ரெட்டவயல், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இதில், ஒன்றியச் செயலாளா்கள் க. அன்பழகன், மு.கி. முத்துமாணிக்கம், வை. ரவிச்சந்திரன், நகரச் செயலாளா் என்.எஸ். சேகா், பொதுக்குழு உறுப்பினா் அ.அப்துல் மஜீத் ஆகியோா் கலந்து கொண்டனா்.