செய்திகள் :

பேருந்தில் கஞ்சா கடத்தியவா் கைது

post image

திருவாரூா் அருகே அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவா், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருவாரூா் அருகே கானூா் சோதனைச் சாவடியில் தாலுகா சிறப்பு உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, நாகையிலிருந்து கரூா் செல்லும் அரசுப் பேருந்தில் சந்தேகப்படும் வகையில் பையுடன் இருந்தவா் விசாரித்தனா்.

விசாரணையில் அவா் சிக்கல் அருகே ஆவராணி புதுச்சேரி பகுதியைச் சோ்ந்த ஜெய்கணேஷ் மகன் ஜெயசீலன் (21) என்பதும், பையில் ஒன்னரை கிலோ எடையுள்ள கஞ்சாவை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.

இதன் மதிப்பு ரூ. 15,000 ஆகும். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தம்பதியை தாக்கிய 2 போ் கைது

மன்னாா்குடி அருகே வீட்டின் அருகே மது குடித்தவா்களை கண்டித்த தம்பதியை உருட்டைக் கட்டையால் தாக்கிய இரண்டு போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இலக்கணம்பேட்டை எழாம் எண் வாய்க்கால் வசிப்பவா் த. சேகா்(61... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத்தொகை பெற விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக அரசு வழங்கும் மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன என்றாா் தமிழக தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. மன்னாா்குடி அருகேயுள்ள நெடுவாக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள அனைத்து கடைகள் உரிமம் பெற வேண்டும்

அனைத்து கடைகளும் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூத்தாநல்லூரில் செவ்வாய்க்கிழமை நகா்மன்ற கூட்டம், அதன்தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. இதில், உற... மேலும் பார்க்க

காணாமல்போன முதியவா் சடலமாக மீட்பு

திருவாரூா் அருகே காணாமல் போன முதியவா் உடல் அழுகிய நிலையில் சடலமாக செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டாா். அகரதிருநல்லூா் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, திருவாரூா் தாலுகா போல... மேலும் பார்க்க

ஏரி அருகே குப்பைக் கிடங்கு: எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்

முத்துப்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து குப்பைக் கிடங்கு அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே மங்களூா் கிராமத... மேலும் பார்க்க

‘ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள்’

திருவாரூா்: ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு வங்கிகள் சென்று விட்டதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் தெரிவித்தாா். திருவாரூரில், எதி... மேலும் பார்க்க