பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் வஞ்சிமுத்து (70). இவா் வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வேலைக்கு மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தாா்.
பழனி- ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலை அனுப்பப்பட்டி பிரிவு அருகே சாலையை கடந்த போது அந்த வழியாகச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.