போ்ணாம்பட்டில் 60 மி.மீ மழை பதிவு
குடியாத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை வரை 24- மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 60- மி.மீ மழை பதிவானது. மேலாலத்தூரில் 55- மி.மீ, குடியாத்தம் நகரில் 29- மி.மீ, ஒடுகத்தூரில் 21- மி.மீ, காட்பாடியில் 12- மி.மீ, சத்துவாச்சாரியில்8-மி.மீ என மாவட்டத்தில் பரவலாக 204-மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 5- மணிக்குத் தொடங்கி சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து இரவு வரை லேசான மழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான குடியிருப்புகளில் மழை நீா் தேங்கியது. கழிவுநீா்க் கால்வாய்கள் நிரம்பி மழை நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.