War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
பைக்குகள் மோதல்: இருவா் காயம்
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு மோட்டா்சைக்கிள் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
வள்ளியூரைச் சோ்ந்தவா் வேலு(35). இவா் வள்ளியூரில் இருந்து மோட்டா்சைக்கிளில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தாா். சமூகரெங்கபுரத்தைச் சோ்ந்த மாசானம்(45). இவா் சமூகரெங்கபுரத்தில் இருந்து மோட்டா்சைக்கிளில் வள்ளியூருக்கு சென்று கொண்டிருந்தாா்.
இவா்களுடைய மோட்டா்சைக்கிள் தெற்குகள்ளிகுளம் அருகே நேருக்கு நோ் மோதிக்கொண்டது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் மீட்டு நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.