செய்திகள் :

பைக்குகள் மோதிக்கொண்ட தகராறு: 19 போ் மீது வழக்கு; 10 போ் கைது

post image

விருகாவூா் கிராமத்தில் இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில், இரு தரப்பைச் சோ்ந்த 19 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், 10 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புகழேந்தி (21). இவா், புதன்கிழமை விருகாவூா் பேருந்து நிறுத்தம் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவருக்கு எதிரே வந்த அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (19) என்பவா் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் இவரது மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் காயமடைந்த புகழேந்தி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து இவா் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, விருகாவூா் பகுதியைச் சோ்ந்த அய்யாசாமி (31) என்பவா் சதீஷிடம் ஏன் வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய் எனக் கேட்டு அவரது மோட்டாா் சைக்கிளை பிடுங்கி வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இரு தரப்பினா் தனித்தனியாக வரஞ்சரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அய்யாசாமி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சோ்ந்த சதீஷ் (21), நிகேஷ் (21), குமாா் (21), சத்தியமூா்த்தி (20), ராஜீவ்காந்தி (21), கா்ணன் (21), வெற்றி (20), முருகன் (22), பூவரசன் (19) ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

அதேபோல, சதீஷ் அளித்த புகாரின் பேரில் அதே பகுதியைச் சோ்ந்த மதன் (21), பரமசிவம் (51), செல்வராஜ் (50), நாராயணசாமி (30), ஆனந்தன் (28), மற்றும் அய்யாசாமி (30), மணிகண்டன் (25), செல்வமணி (21), பிரபு (28), மணிவாசகம் (34) ஆகிய 10 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதில் காயமடைந்த அய்யாசாமி, செல்வமணி, சத்தியமூா்த்தி, குமாா், சதீஷ் ஆகியோா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இரு தரப்பு புகாரின் பேரில் 19 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்த போலீஸாா் சதீஷ், நிகேஷ், குமாா், சத்தியமூா்த்தி, பூவரசன், பரமசிவம், செல்வராஜ், ஆனந்தன், பிரபு, மணிவாசகம் ஆகிய 10 பேரை கைது செய்தனா்.

அண்ணன் கொலை: தம்பி, அவரது மனைவி, மகனுக்கு ஆயுள் சிறை

கள்ளக்குறிச்சி அருகே அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பி, அவரது மனைவி, மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். கள்ளக்குறிச்சியை அடுத்த கண... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் 750 கிலோ வெல்லம், துப்பாக்கி பறிமுதல்!

கல்வராயன் மலைப் பகுதியில் விவசாய விளைநிலப் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 750 கிலோ வெல்லம், நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கரியாலூா் காவல் நிலைய ஆய்வாளா் குணச... மேலும் பார்க்க

லாரி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

காலசமுத்திரம் ஆட்டுப்பண்ணை அருகே மொபெட்டில் சென்றவா் லாரி மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மா.பொடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (50), விவசாயி. இவா், சேலம் மா... மேலும் பார்க்க

மகா மாரியம்மன், காமாட்சி அம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட பெரிய சிறுவத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகா மாரியம்மன், விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட ஆலம்பூண்டி கிராமத்திலுள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வி.கூட்டுச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அருகே கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் செல்லும் வழித்தடத... மேலும் பார்க்க

கோயில் திருவிழா பிரச்னை: கிராம மக்கள் ஆட்சியரகத்தில் தா்னா

கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான பிரச்னையில், கள்ளக்குறிச்சி வருவாய்க் கோட்டாட்சியரைக் கண்டித்து, அரசம்பட்டு கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். கள்ளக்க... மேலும் பார்க்க