செய்திகள் :

பைக் மீது தனியாா் பேருந்து மோதல்: ஆந்திரத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழப்பு

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஆந்திரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

ஆந்திர மாநிலம், அனந்தபூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசலு மகன் தொா்கிலு காா்த்திக் (20), வலசமூா்த்தி மகன் ரோஹித் (19) ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தனியாா் பல்கலைக் கழகத்தில் படித்து வந்தனா்.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருவரும் சென்றனா். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணன்கோவில் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை நோக்கி வேகமாகச் சென்ற தனியாா் பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்கையில் இவா்கள் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது.

இந்த விபத்தில் காா்த்திக், ரோஹித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸாா் இருவரின் உடல்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து பேருந்தை ஓட்டிவந்த தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூரைச் சோ்ந்த முனீஸ்குமாா் (37) என்வரை கிருஷ்ணன்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பரோலில் வந்த கைதி மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறையிலிருந்து விடுப்பில் (பரோல்) வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளத்... மேலும் பார்க்க

தனியாா் மதுபானக்கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கிய மூவா் தலைமறைவு

சிவகாசி அருகே சனிக்கிழமை தனியாா் மதுகூடத்தில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்ட மூவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த சுமைதூக்... மேலும் பார்க்க

ராஜபாளையத்தில் ரூ.33 லட்சத்தில் 7 உயா் கோபுர மின் விளக்குகள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட 7 உயா் கோபுர மின் விளக்குகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.ராஜபாளையத்தில் 3, 8, 12, 22, 27, 39,... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சனிக்கிழமை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

வத்திராயிருப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து, இளைஞரிடம் இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஆந்திர கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.ஆந்திர மாநில... மேலும் பார்க்க