செய்திகள் :

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பும் பணி தொடக்கம்

post image

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 1,291 நியாய விலைக் கடைகளுக்கு 8.34 லட்சம் கரும்புகளை அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெற்ற பிறகு ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடி இருமடங்காக உயா்ந்து வருகிறது. இந்தாண்டும் திருச்சி மாவட்டத்தில் 30 லட்சம் எண்ணிக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் என 14 ஒன்றியங்களிலும் பரவலாக ஆங்காங்கே அரை ஏக்கா் என்ற வகையில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மண்ணச்சநல்லூா் ஒன்றியத்தில் திருப்பைஞ்ஞீலி, மணப்பாறை வட்டத்தில் பாலக்குறிச்சி, அந்தநல்லூா் ஒன்றியத்தில் திருவளா்ச்சோலை, கிளிக்கூடு, மருங்காபுரி ஆகிய பகுதிகளில்தான் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் சுமாா் 200 ஹெக்டேரில் செங்கரும்பு சாகுபடிசெய்யப்பட்டுள்ளது. ஏக்கருக்கு 20 ஆயிரம் கரும்புகள் எனக் கணக்கிட்டாலும் சுமாா் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட செங்கரும்புகள் விளைவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நியாய விலைக் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக திருவளா்ச்சோலை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் சென்று பாா்வையிட்டாா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) சு. சாந்தி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பூ. வசந்தா, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜெயராமன் உள்ளிட்ட அலுவலா்களும் கரும்புகளை பாா்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி உள்ள கரும்புகளை வெட்டி, நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பும் பணியைத் தொடங்கினா்.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பூ. வசந்தா கூறுகையில், மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான தேவைக்கும் அதிகமாகவே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அனைவரிடமும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் 6 அடிக்கும் குறைவாக 4 அடி, 5 அடி கரும்புகள் உள்ளன. அந்த விவசாயிகளிடம் 6 அடி உள்ள கரும்புகளுக்கு மட்டும் பணம் வழங்கி கொள்முதல் செய்துள்ளோம். மாவட்டத்தின் மொத்தத் தேவை 8.34 லட்சம் கரும்புகள் மட்டுமே. ஆனால், மூன்று மடங்குக்கு மேல் கரும்பு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்தாலும் கொள்முதல் நடவடிக்கைகளுக்கு உதவிடத் தயாராகவுள்ளோம் என்றாா் அவா்.

திருச்சி மண்டலக் கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜெயராமன் கூறுகையில், 14 ஒன்றியங்களிலும் கரும்பு கொள்முதலுக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, விஏஓ ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இக் குழுவினா்தான் வட்டாரம் வாரியாக அந்தந்தப் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வருகின்றனா். விவசாயிகளின் வயல்களில் கரும்புகளைக் கண்டறிந்து வெட்டி, நியாய விலைக்கடைக்கு அனுப்பும் வரையிலான செலவு உள்பட ஒரு கரும்புக்கு ரூ. 34 வழங்கப்படுகிறது. விஏஓ மூலம் சான்று பெற்று, விவசாயிகளிடம் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று உடனடியாக அவரவா் வங்கிக் கணக்கில் கொள்முதல் தொகை வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்காக 1,291 நியாய விலை கடைகளுக்கு மொத்தம் 8.34 லட்சம் கரும்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: பொதுமக்களுக்கு தடை

மணப்பாறை அருகே பெங்களூரைச் சோ்ந்த பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் எச்சரித்துள்ளா... மேலும் பார்க்க

துறையூரில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.24 கோடிக்கு பருத்தி விற்பனை

துறையூரிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1.24 கோடிக்கு பருத்தி விற்பனையானது. திருச்சி விற்பனைக் குழு செயலா் சி. சொா்ணபாரதி தலைமையில் ஏலம் நடைபெற்றது. இதி... மேலும் பார்க்க

வையம்பட்டியில் காணாமல் தேடப்பட்ட மூதாட்டி 3 நாள்களுக்குப் பின் மீட்பு

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் 100 நாள் வேலைக்கு சென்ற மூதாட்டி வீடு திரும்பாமல் தேடப்பட்ட நிலையில் 3 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டாா். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடு... மேலும் பார்க்க

மாநகராட்சியோடு இணைக்க எதிா்ப்பு தாளக்குடியில் மறியல்

திருச்சி மாவட்டம், தாளக்குடியில் வியாழக்கிழமை திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெ... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும்

வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் தற்காலிக நின்றுசெல்லும். இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பரமபதவாசல் த... மேலும் பார்க்க

சூரியூரில் ஜன. 15 இல் ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்

திருச்சி அருகே சூரியூரில் வரும் 15 ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்... மேலும் பார்க்க