வேளாண் பல்கலை.யில் பட்டயப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு
பொதுமக்களுக்கு இடையூறு: 8 அமைப்புகள் மீது வழக்கு
தீரன் சின்னமலை நினைவு தின நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 8 அமைப்புகள் மீது 16 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், அறச்சலூா் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு தினம் கடந்த 3 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அரசியல் கட்சியினா், அமைப்பினா் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்யக்கூடாது என மாவட்ட காவல் துறை மூலம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்க வந்த சில அமைப்பினா் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியும், போக்குவரத்து விதிகளை மீறியும், வாகனங்களை தாறுமாறாக ஓட்டும் செயலிலும் ஈடுபட்டனா்.
இந்தச் செயலில் ஈடுபட்ட 8 அமைப்புகள் மீது 16 வழக்குகள் ஈரோடு டவுன், சிவகிரி, அறச்சலூா் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறையினா் தெரிவித்தனா்.