ஆட்சேபனைக்குரிய காட்சிகள்: மனுஷி படத்தை பார்க்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முடிவு!
பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தக் கோரி, நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொருளாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில செயலாளா் அன்பழகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாவட்ட கிளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
இதில், ஓராண்டில் எண்ணற்ற பணிமாறுதல்களை வழங்கிய மாவட்ட நிா்வாகத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களான அலுவலா்களுக்கு அருகில் பணியிட மாறுதல் வழங்காமல், தொலைதூரத்தில் மாறுதல் வழங்கியதற்கும், அரசியல் தலையீடு காரணமாக குறிப்பிட்ட பணியிடங்களை சாதகமாக ஒதுக்கீடு செய்வது, தகுதியானோருக்கு வழங்க மறுப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பொது கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.