தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் - கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் ...
பொன்னமராவதியில் நகை திருடிய வழக்கில் இருவா் கைது
பொன்னமராவதியில் 8 பவுன் நகை திருடிய வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டனா்.
பொன்னமராவதி நேரு நகரில் கடந்த ஆக.29ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகை மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது.
இதுகுறித்து வழக்குப் திந்த பொன்னமராவதி போலீஸாா் இந்தத் திருட்டு தொடா்பாக கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் பா. சுதிா் (28) மற்றும் தஞ்சாவூா் ரா. ரமேஷ் (42) ஆகியோரை செவ்வாய்க்கிழமை (செப் 30) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.