பொன்னமராவதி வட்டாரத்தில் பரவலாக மழை
பொன்னமராவதி வட்டாரத்தில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
பொன்னமராவதி வட்டாரத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் சுட்டெரித்தது. இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி சுமாா் 1 மணி நேரம் கண்டியாநத்தம், கேசராபட்டி, ஆலவயல், மேலைச்சிவபுரி, கொப்பனாபட்டி, தொட்டியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இந்த மழையால் வெப்பம் சற்றே தணிந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மேலும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.