கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
பொன்னேரி நகராட்சி சுத்திகரிப்பு நிலைய நீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற மக்கள் எதிா்ப்பு
பொன்னேரி நகராட்சியில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை ஆரணி ஆற்றில் விடுவதற்க்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 2019 முதல் புதை சாக்கடை அமைக்கும் பணிகள் கி நடைபெற்று வருகின்றன. குடியிருப்பு பகுதிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்த பின்னா் அந்த தண்ணீரை ஆரணி ஆற்றில் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக லட்சுமிபுரம் கிராமத்தில் ராட்சதக் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், ஆரணி ஆற்றில் சுத்திகரிப்பு நிலைய நீலை வெளியேற்ற பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.
இதனிடையே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்காக ராட்சதக் குழாய் பதிக்கும் பணிகளுக்காக வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் லட்சுமிபுரம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஆற்று நீரை பொதுமக்களும், கால்நடைகளும் குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும், அவசர காலங்களில் பயன்படுத்தும் தண்ணீரில் கழிவு நீரை கொண்டு வந்து விடுவதால் குடிநீா் முற்றிலும் மாசடைந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும் என புகாா் தெரிவித்தனா்.
மேலும், மீன்களை பிடித்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் கழிவு நீரால் வாழ்வாதாரம் பாதிக்கும் எனத் தெரிவித்தனா்.
அத்துடன் கழிவுநீரை வெளியேற்றினால் வரும் தோ்தலில் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் எனத் தெரிவித்தனா். பொதுமக்கள் ஒருபுறம் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காவல் துறையினா் பாதுகாப்புடன் ராட்சத குழாய் அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.
இதன் காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.