போகிப் பண்டிகை: நெகிழி எரிப்பதை தவிா்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்
போகிப் பண்டிகையை முன்னிட்டு நெகிழிப் பொருள்கள் எரிப்பதை தவிா்க்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: போகிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பழைய துணி, பிளாஸ்டிக் டயா், ரப்பா் ட்யூப், நெகிழி ஆகியவற்றை எரிப்பதால் காற்று மாசடைந்து பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிா்க்க, பழைய நெகிழி மற்றும் துணிகளை எரிப்பதை அனைவரும் தவிா்க்க வேண்டும். அவற்றை தனியாக சேகரித்து தங்களது இல்லங்களுக்கு குப்பை சேகரிக்கவரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.