கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்
போக்ஸோ கைதி தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே போக்ஸோ வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த நபா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
உவரி அருகே உள்ள நவ்வலடியைச் சோ்ந்தவா் ரமேஷ் (46). இவா் மீது உவரி காவல் நிலைய போலீஸாா் கடந்த 2019 இல் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
பின்னா் பிணையில் இவா் வெளியே வந்தாா். இவா் மீதான வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், போக்ஸோ நீதிமன்றம் இவரது தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதனால், மனமுடைந்த ரமேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து உவரி காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].