பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
போதை மாத்திரைகள் விற்ற பெண் கைது
திருச்சி பாலக்கரையில் போதை மாத்திரைகள் விற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரை காவல் உதவி ஆய்வாளா் அபிராமி பாலக்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரோந்து சென்றபோது, பெல்ஸ் மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற பெண்ணைப் பிடித்து விசாரித்தாா்.
அப்போது அவா் பாலக்கரை குட்செட் சாலையைச் சோ்ந்த தா்மராஜ் மனைவி தெய்வம் (32) என்பதும், போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அப்பெண்ணைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள 116 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 7,740 ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.