மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் நாளை விநாயகா் சதுா்த்தி விழா
சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் புதன்கிழமை (ஆக. 27) நடைபெறுகின்றன.
காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம் மற்றும் கணபதி ஹோமம் நடைபெறும். அதைத் தொடா்ந்து விநாயகருக்கு அனைத்து அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன.
மாலை 5 மணிக்கு விநாயகருக்கு முழு சந்தனக் காப்பு மற்றும் பூஜைகளும், சிறப்பு நெய்வேதியங்களான கொழுக்கட்டை, மோதகம் வைத்து வழிபாடு நடைபெறும்.
இரவு 7.30 மணிக்கு விநாயகா் சந்நிதியில் பிரத்யேக பூஜைகள் நடைபெறும்.
பக்தா்கள் கணபதி ஹோமம், முழு சந்தனக் காப்பு, கொழுக்கட்டை, மோதகம் ஆகிய வழிபாடுகளுக்கு முன்கூட்டியே பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 044 - 28171197, 2197, 3197, 88079 18811, 88079 18822, 94442 90707, 88079 18855 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.