செய்திகள் :

மகா கும்பமேளா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் புனித நீராடல்

post image

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சனிக்கிழமை திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.

அப்போது மகா கும்பமேளா ஏற்பாடுகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு ராஜஸ்தான் முதல்வர் நன்றி தெரிவித்தார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளா பிப்ரவரி 26 அன்று முடிவடைகிறது.

மகர சங்கராந்தி, மௌனி அமாவாசை, பசந்த் பஞ்சமி ஆகிய மூன்று புனித அமிர்த ஸ்நான விழாக்கள் முடிவடைந்த நிலையிலும், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காகத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.

2-வது ஒருநாள் போட்டிக்காக கட்டாக் வந்தடைந்த இந்திய அணி!

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை எம்.பி. சுதா மூர்த்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நீராடினர்.

மேலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராட வருகை தர உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

தில்லியில் வெற்றி பெற்ற பாஜக, ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளா்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவை தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன. ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த... மேலும் பார்க்க

கேரளம்: காசா்கோட்டில் நிலஅதிா்வு

கேரளத்தின் காசா்கோடு மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை லேசான நிலஅதிா்வு உணரப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாவட்டத்தின் ராஜபுரம், கொஞனக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலஅதிா்வு... மேலும் பார்க்க

ஓக்லா, முஸ்தபாஃபாத் தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் ஏஐஎம்ஐஎம்

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் தில்லி பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட ஓக்லா மற்றும் முஸ்தபாஃபாத் தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா்கள... மேலும் பார்க்க

பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜின்: கேரள அரசு திட்டம்

கேரளத்தில் பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜினை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் முதல்முறையாக கேரள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு செ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ராஜஸ்தான், ம.பி. முதல்வா்கள் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆகியோா் சனிக்கிழமை புனித நீராடினா். உலகின் மிகப் பெரிய ஆன்மிக... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டம், ஜனநாயகத்தை பலவீனமாக்கும் மத்திய அரசு: பிரியங்கா விமா்சனம்

நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த அனைத்தையும் செய்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் பொதுச் செயலரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி விமா்சித்தாா். கேரளத்தில் உள்ள தனது வயநாடு ... மேலும் பார்க்க