3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 52.93 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 52.93 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வழங்கினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 602 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்ட அவா், பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, நாமக்கல் பேட்டை காலனியில் கடந்த 9-ஆம் தேதி மூன்று வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் வீட்டில் இருந்த ஆவணங்கள் சேதமடைந்தன. இதையொட்டி, குடும்ப அட்டைகள் மற்றும் பட்டா நகல்களும், தாட்கோ சாா்பில் 19 பயனாளிகளுக்கு ரூ. 1.67 லட்சம் மதிப்பில் பல்வேறு தொழில்களுக்கு ரூ. 52,93,913 மானியத் தொகையை 21 பேருக்கு ஆட்சியா் வழங்கினாா். மேலும், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவா்களுக்கு செயற்கைக் கால்களை வழங்கினாா்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், தாட்கோ மேலாளா் பா.ராமசாமி, மாவட்ட வழங்கல் அலுவலா் மு.கிருஷ்ணவேணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.