செய்திகள் :

மக்கள் நம்பிக்கை திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம்

post image

நாட்டில் வா்த்தகம் செய்வதையும் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையிலும் ‘மக்கள் நம்பிக்கை (சட்டப் பிரிவுகள் திருத்த) மசோதா 2025’ என்ற மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு சட்டங்களில் இடம்பெற்றுள்ள பல பிரிவுகளை குற்றமற்ாக்க அல்லது தண்டனையின் அளவைக் குறைக்க இந்த மசோதாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி மக்களவையில் எதிா்க்கட்சிகள் செய்துவந்த கடும் அமளிக்கிடையே மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அறிமுகம் செய்த இந்த சட்டத் திருத்த மசோதா, பின்னா் மக்களவையின் தோ்வுக் குழு ஆய்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த மசோதா குறித்து ஆய்வு செய்வதோடு, பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளையும் பெற்று, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளில் தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க தோ்வுக் குழு பணிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில், நாட்டில் வா்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில் பல்வேறு சட்டங்களில் இடம்பெற்றுள்ள 288 பிரிவுகள், வாழ்வதை எளிதாக்கும் வகையில் பல்வேறு சட்டங்களின் 67 பிரிவுகள் என மொத்தம் 355 பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, புது தில்லி நகராட்சி மாமன்ற சட்டம் 1994 மற்றும் மோட்டாா் வாகனச் சட்டம் 1988 ஆகியவற்றின் 67 பிரிவுகளை திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, நாட்டில் வா்த்தகத்துக்கான சூழலை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சி என்கின்றனா் அதிகாரிகள்.

முன்னதாக, மக்கள் நம்பிக்கை (சட்டப் பிரிவுகள் திருத்தம்) சட்டம் கடந்த 2023-இல் இயற்றப்பட்டது. அதில், 19 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் நிா்வகிக்கப்படும் 42 மத்திய சட்டங்களில் இடம்பெற்றிருந்த 183 பிரிவுகள் குற்றமற்ாக அல்லது தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டன.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2025-ஆம் ஆண்டு திருத்த மசோதாவில், 10 மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் நிா்வகிக்கப்படும் 16 மத்திய சட்டங்களில் இடம்பெற்றுள்ள பிரிவுகள் குற்றமற்ாக்குவது அல்லது தண்டனைக் குறைப்பு செய்யப்பட உள்ளன.

முக்கியமாக, 10 சட்டங்களின் கீழ் வரும் 76 குற்றங்களுக்கு எச்சரிக்கை அல்லது அறிவுரை வழங்கி அனுப்பிவைக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. சிறிய குற்றங்களுக்கான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது எச்சரிக்கை அளித்து அனுப்பும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.

இந்திய துறைமுகங்கள் மசோதாவுக்கு ஒப்புதல்: மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே ‘இந்திய துறைமுகங்கள் மசோதா 2025’-க்கு திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, மக்களவையில் கடந்த 12-ஆம் தேதி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

துறைமுகங்கள் தொடா்பான சட்டங்களை ஒருங்கிணைத்தல், துறைமுகங்களின் ஒருங்கிணைந்த ேம்பாடு, துறைமுகங்கள் வழி வா்த்தகத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாக அமல்படுத்தப்படும்.

பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச மாநில முன்னாள் எம்எல்ஏ பகவான் சர்மா (எ) குட்டுபண்டித் மீது பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்

தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது சந்தேகம் இருந்தால் தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் சட்டப் பேரவைகளைக் கலைக்க "இண்டி' கூட்டணிக் கட்சிகள் தயாரா என்று பாஜக சவால் விடுத்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் செயல்ப... மேலும் பார்க்க

சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது அமளி: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ள வீரர் சுபான்ஷு சுக்லா தொடர்பான விவாதத்தின்போது மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பாஜக மூத்த தலைவரும், ம... மேலும் பார்க்க

வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

நமது நிருபர்வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோட... மேலும் பார்க்க

குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. ‘இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா 2025’ என்ற பெயரிலா... மேலும் பார்க்க

ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவரிவா்த்தையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவைய... மேலும் பார்க்க