செய்திகள் :

மஞ்சு வாரியரிடம் தவறாக நடந்துகொண்ட ரசிகர்கள்? வைரலாகும் விடியோ!

post image

கடைதிறப்பு விழாவுக்குச் சென்ற நடிகை மஞ்சு வாரியரிடம் ரசிகர்கள் தவறாக நடந்துகொண்டதாக இணையத்தில் விடியோ வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் முன்னடி நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தின் மூலம் பிரபலமானார்.

பின்னர் அஜித், ரஜினி படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (மே.2) கடை திறப்பு விழாவுக்குச் சென்ற மஞ்சு வாரியரைப் பார்க்க கூட்டம் கூடியது.

கூட்டத்தினைக் கண்ட மஞ்சு வாரியர் காரில் ஏறி நின்று கை அசைத்துக்கொண்டிருப்பார்.

இந்தக் கூட்டத்திற்கு நடுவில் யாரோ ஒருவர் மஞ்சு வாரியரின் இடுப்புப் பகுதியில் கை வைப்பதாக விடியோவில் பதிவாகியுள்ளது.

இது ஆணா, பெண்ணா என எதுவும் தெரியவில்லை. ஏனெனில் அங்கு பெண்களும் அதிகமாக குவிந்திருந்தார்கள். கையில் கைக்குட்டையுடன் இருப்பதால் அது பெண்ணாக இருக்குமெனவும் பலர் கூறி வருகிறார்கள்.

மஞ்சு வாரியர் இதைக் கண்டுகொள்ளாமல் ரசிகர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்துக்கொடுத்துவிட்டு காரில் சென்றுவிடுவார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் அந்த முகம் தெரியாத ஒருவரின் அநாகரீகமான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

நடிகைகள், நடிகர்களுக்கு பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்பதும் தனியுரிமை கேள்விக்குள்ளாவதும் பலகாலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.லார்க்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் படத்தின் அப்டேட்!

டூரிஸ்ட் ஃபேமலி வெற்றியைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். நடிகராக அடுத்தடுத்த பல படங்களை தனது கைவசம் வைத்... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!

ஹிட் 3 படப்பிடிப்பில் நானிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருப்பினும் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாரானது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி ... மேலும் பார்க்க

சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கப்போவது விஜய்யா? - அசினா | minority | TvkVijay | DMK | ADMK | Shorts

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?6819fa10070d8f0221060dbc/66d5a25983448bee6626e223/thumbnail-1-... மேலும் பார்க்க

தாயகப்போகும் லாவண்யா..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை லாவண்யா த்ரிப்பாதி கருவுற்று இருப்பதை நடிகர் வருண் தேஜ் அறிவித்துள்ளார்.தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிப்பாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள... மேலும் பார்க்க