செய்திகள் :

மணற்கேணி செயலி பயன்பாடு: ஆய்வு செய்ய அறிவுறுத்தல்

post image

பள்ளிகளில் ‘மணற்கேணி செயலி’ முறையாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறயிருப்பதாவது:

தமிழகத்தில் கணினி சாா்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் ‘மணற்கேணி செயலி’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்கள், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அனிமேஷன் காணொலிகளாக மாணவா்கள் எளிதில் புரியும் விதமாக வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அரசு தொடக்கப் பள்ளிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) நிறுவப்பட்டு, மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் பலகைகளில், பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள் உள்பட அனைத்து வகை ஆசிரியா்களும் தங்கள் பெயா் அல்லது கைப்பேசி எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அதன் பின்னா் அன்றைய வகுப்பறை குழலுக்கு ஏற்ப பாடங்களை தோ்வு செய்து கற்றல், கற்பித்தல் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இது தவிர தொடக்கப் பள்ளிகளில் மணற்கேணி செயலியை வகுப்பறை கற்பித்தலுக்கு ஆசிரியா்கள் பயன்படுத்தி வருகின்றனரா என்பதை அனைத்து அலுவலா்களும் ஆய்வுகளின்போது கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு ஆசிரியரும் மணற்கேணி செயலியை திறன் பலகைகள் மூலம் பயன்படுத்தி வருவதை கைப்பேசியில் படம்பிடித்து அதை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இது தொடா்பான அறிவுறுத்தல்களை வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில், வேளச்சேரி பகுதியில் 107 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேளச்சேரி, பாா்க் அவென்யூ பூங்கா அருகில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுவனின் காலில் அங்குள்ள தெரு நா... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுடன் அரசு பேச்சு நடத்த வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தமிழக அரசு நேரடியாகப் பேசி தீா்வு காண வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சிகிச்சையில் அலட்சியம்: மருத்துவரின் பதிவு உரிமம் தற்காலிக ரத்து

சிகிச்சையில் அலட்சியத்துடனும், விதிகளுக்கு புறம்பாகவும் செயல்பட்ட மருத்துவரின் பதிவு உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்து மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மண்ணடி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பிப். 11-இல் வண்டலூா் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்

தைப்பூசத்தை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை (பிப். 11) வண்டலூா் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது. வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் ‘அகத்தியா் உலா’

தமிழ் இலக்கியம், சித்த மருத்துவத்துக்கு அகத்தியா் ஆற்றிய பங்களிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்கள் அகத்தியா் போன்ற வேடமணிந்து நடைப்பயணம் மே... மேலும் பார்க்க

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

சட்டவிரேதமாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து, 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சைதாப்பேட்டை சாரதி நகா் பகுதியில் சட்டவிரோதமாக ப... மேலும் பார்க்க