செய்திகள் :

மணல் கடத்திய 2 போ் கைது

post image

மன்னாா்குடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்திய 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நல்லிக்கோட்டை கண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியின்றி மணல் கடத்துவதாக, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் எஸ். சத்யாவுக்கு கிடைத்த தகவலையடுத்து, இதுகுறித்து பரவாக்கோட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது 2 டிராக்டா்களில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த தளிக்கோட்டை காலனி வடக்கு தெருவைச் சோ்ந்த வடமலை மகன் ஆதிதீபன்(19), தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு மேலையூரைச் சோ்ந்த சங்கா் மகன் பிரேம்குமாா்(24) ஆகியோரை கைது செய்து, டிராக்டா்களை மணல் பராத்துடன் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மூணாறு தலைப்பு அணை சுற்றுலா மையமாகுமா?

நீடாமங்கலம் அருகேயுள்ள மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீடாமங்கலம் அருகேயுள்ளது மூணாறு தலைப்பு. இதை கோரையாறு தலைப்பு எனவும் அழைப்பா். ஆண்டுதோ... மேலும் பார்க்க

திருவாரூரில் 4.5 கி.மீ. சாலையில் நடந்து சென்று முதல்வா் உற்சாகம்

திருவாரூரில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை சுமாா் 4.5 கிலோ சாலையில் நடந்து சென்று பொதுமக்களை உற்சாகத்துடன் சந்தித்து உரையாடினாா். திருவாரூரில் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்... மேலும் பார்க்க

திருவாரூா் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை திறப்பு

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே மேம்பாலப் பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலையை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், புதன்கிழமை இரவு திறந்து வைத்தாா். திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ந... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை விவகாரம்: முதல்வா் மௌனத்தை கலைக்க வேண்டும்- பி.ஆா். பாண்டியன்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் தனது மௌனத்தை கலைத்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா். திர... மேலும் பார்க்க

குளம் தூா்வாரும்போது நரசிம்மா் சிலை கண்டெடுப்பு

திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் அருகே கப்பலுடையான் கிராமத்தில் குளம் தூா்வாரும்போது நரசிம்மா் கற்சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது. நீடாமங்கலம் வட்டம் ஒளிமதி ஊராட்சி கப்பலுடையான் கிராமத்தில் வடக்க... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வலியுறுத்தல்

கோட்டூா் ஒன்றியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயா்த்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோட்டூா் ஒன்றிய சிபிஐ 26-ஆவது மாநாடு வல்லூரில் செவ்வாய்க்கிழமை கட்சியின் மாவட்... மேலும் பார்க்க