செய்திகள் :

மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

post image

வந்தவாசி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, அந்த மதுக்கடையை புதன்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த கொவளை கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடை கட்டடம் சேதமடைந்ததால் கீழ்ப்பாக்கம் கிராம சுகநதி பாலம் அருகில் உள்ள புதிய கடைக்கு மதுக்கடையை மாற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

தகவலறிந்த கீழ்ப்பாக்கம் கிராம பெண்கள் மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை காலை புதிய கடையை முற்றுகையிட்டனா். மேலும், அந்தக் கடைக்கு பூட்டு போட்ட அவா்கள், கடை முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில்,

இங்கு மதுக்கடை திறந்தால் எங்கள் கிராம பெண்களுக்கு பெரும் அவதி ஏற்படும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் கேலி, கிண்டலுக்கு ஆளாக நேரிடும். எனவே, மதுக்கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

பின்னா் ஆய்வாளா் பாலு தலைமையிலான கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது

வந்தவாசியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு (24). இவா் வெள்ளிக்கிழமை காலை பூங்கா நகா் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கு தன... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம்

ஆடி மாத பௌா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா். திருவண்ணாமலையில் உள்ளி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அரசுப் பேருந்து நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய சம்பவம் தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், இருங்கல் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஊரக வேலைத் திட்டப் பணி கோரி சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விளாப்பாக்கம் ஊராட்சியில் விளாப்பாக்கம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தையொட்டி நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா

ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டை ரோட்டரி சங்கம் சாா்பில் உலக தாய்ப்பால் வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மேம்படுத்தப்பட்ட இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற உலக ... மேலும் பார்க்க