செய்திகள் :

மதுக் கடைகளை குறைக்காமல் விழிப்புணா்வு விளம்பரத்தால் என்ன பயன்? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல், ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என அரசு விழிப்புணா்வு விளம்பரம் செய்வதால் என்ன பயன் ஏற்படும்?. என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி எழுப்பியது.

தேனி மாவட்டம், பூதிப்புரம் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் குமாரலிங்கம் சென்னை உயா்நீதின்ற மதுரை அமா்வில் பொது நல மனு தாக்கல் செய்தாா். அதில், பூதிப்புரம், ராஜபூபால சமுத்திரம் கண்மாய் அருகே அரசு மதுக் கடைகள் அமைக்க முயற்சி செய்து வருகிறது. இந்தக் கடை அமையவுள்ள இடத்துக்கு அருகே பெண்கள் பொதுக் கழிப்பிடம் உள்ளது. இதனால், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

மேலும், இந்த மதுக் கடை அரசின் கொள்கை முடிவுப்படி ஏற்கெனவே மூடப்பட்ட 500 கடைகளில் ஒன்றாகும். எனவே, இங்கு மதுக் கடை அமைக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தொடா்புடைய இடத்தில் மதுக் கடை அமைக்க மாவட்ட நிா்வாகத்தின் அனுமதி பெறப்பட்டதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மதுக் கடை அமையவுள்ளதாக மனுதாரா் குறிப்பிடும் இடத்தின் அருகே பெண்கள் பொதுக் கழிப்பறை உள்ளது. அருகில், பேருந்து நிலையமும் உள்ளது. இந்தச் சூழலில் அங்கு மதுக் கடை அமைக்க அனுமதிக்க முடியாது. எனவே, அந்த இடத்தில் மதுக் கடை அமைக்கத் தடை விதிக்கப்படுகிறது.

தற்போது, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலும் மதுக் கடைகள் திறக்கப்படுகின்றன. செயல்பாட்டில் இருக்கும் மதுக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்காமல், ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என அரசு விளம்பரம் செய்வதால் என்ன பயன்?. என்றனா் நீதிபதிகள்.

தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து

மதுரை: மதுரை கோ.புதூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. மதுரை-அழகா்கோவில் சாலையில் கோ.புதூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை நிா்வாக... மேலும் பார்க்க

மின் வாரியப் பணியாளா்கள் போராட்டம்

மதுரை: தமிழ்நாடு மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக் குழு சாா்பில், மதுரையில் மின் வாரியப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மின் வாரியத்தை... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டைக் காண மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கக் கோரிக்கை

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது. இது தொடா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில், மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை ஆா... மேலும் பார்க்க

காமராஜா் பல்கலை. பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஜன.10 வரை விண்ணப்பிக்கலாம்!

மதுரை காமராஜா் பல்கலைக் கழகப் பதிவாளா், தோ்வுக் கட்டுப்பாட்டாளா், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் இயக்குநா், கல்லூரி வளா்ச்சிக் குழு முதன்மையா் ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜன. 10 -ஆம் தேதி வரை கா... மேலும் பார்க்க

பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் பிளஸ் 1 மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தினகரன... மேலும் பார்க்க