'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
மதுப் புட்டிகள் பதுக்கிய இளைஞா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தென்கரையில் கம்பம் சாலைப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தென்கரை இந்திராபுரி தெருவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சந்தனக்குமாரை (39) போலீஸாா் பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் வைகை அணை விலக்கில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தென்கரை போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 80 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.